
நாட்டை பாதுகாக்கும் அளவுக்கு மோடி திறமையான பிரதமர் என்பதால்தான்
பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்தது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தெரிவித்தார்.
தருமபுரி அருகே உள்ள அரூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இன்று
நடைபெற்றது அதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
இதனால்தான் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தோம்.. பாமக கூட்டணி குறித்து
அன்புமணி விளக்கம்!
திறமையான பிரதமர் இருந்தால்தான் இந்த நாட்டை காக்க முடியும். இதை கருதியே
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக. பாதுகாப்பான இந்தியாவை
உருவாக்குவதில் வல்லமை படைத்தவர் நரேந்திர மோடி. கடுமையாக வசை பாடிய
வைகோவுடன் திமுக மற்றும் கூட்டணி வைக்கலாமா?
தமிழகத்தில் தொடர்ந்து விலையில்லா மின்சாரம் வழங்கப்படும் கடும் வறட்சி
நிலவினாலும் கூட தமிழகத்தில் விலைவாசி உயரவில்லை. நன்றி மறப்பவன்
சோதனைகளுக்கு உள்ளாகுவான். நன்றி மறந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக
சென்றவர்கள் இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment