சிபிஐ இயக்குனர்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களுக்கு முன்
நடைபெற்றபோது சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா அதிரடியாக நீக்கப்பட்டு
அவருக்கு பதிலாக நாகேஸ்வர ராவ் என்பவரை மத்திய அரசு சிபிஐ இயக்குனராக
நியமனம் செய்தது. அதன்பின் மீண்டும் அலோக்வர்மா நீதிமன்ற உத்தரவால் சிபிஐ
இயக்குனர் பொருப்பை ஏற்றதும், அதன் பின்னர் அவரை மத்திய அரசு அதிரடியாக
மாற்றியது நாடறிந்ததே. தற்போது இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் சிபிஐ இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் இருந்தபோது உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பீகார் அரசு இல்ல விவகாரத்தை விசாரணை செய்து வந்த அதிகாரியை மாற்றினார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

No comments:
Post a Comment