
உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது | புல்வாமா கார் ஓனர்
கண்டுபிடிப்பு- வீடியோ
டெல்லி: பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய
பிறகு, ஜம்மு காஷ்மீர் எல்லையில் அந்த நாட்டு ராணுவம் போர் நிறுத்த
ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தத்
தொடங்கியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது
பாகிஸ்தான் படைகள் இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்துவது
வழக்கமாக உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இதுபோன்ற தாக்குதலை பாகிஸ்தான்
அதிகப்படுத்தி இருந்தது. ஆனால் இன்று மதியம் முதல் தாக்குதல் அத்துமீறிப்
போய்க் கொண்டுள்ளது. மிகவும் ஆவேசமாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான்
ராணுவ வீரர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர், காஷ்மீர்
மாநிலத்தில் கஞ்சக், அக்னூர் செக்டார், நவ்ஷெரா செக்டார் மற்றும் பூஞ்ச்
மாவட்டத்தில், இந்த தாக்குதல் பதிவாகி உள்ளது.
எனினும், இந்திய துருப்புகளுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால்
அந்த நாடு இது போன்ற துப்பாக்கிச்சூடு மூலமாக தனது கோபத்தை தீர்த்துக்
கொள்வதாக பாதுகாப்பு துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment