
இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு விமானி மட்டுமே தங்கள் வசம் சிக்கியுள்ளதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் பல்டியடித்துள்ளது.
இரண்டு
இந்திய பைலட்டுகள் தங்கள் வசம் சிக்கியதாக, இன்று காலை அறிவித்திருந்த
நிலையில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாலையிலேயே மாற்றியுள்ளது.
செம ட்விஸ்ட்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. இந்தியா, ரஷ்யாவுடன்
இணைந்து கூட்டறிக்கை
பாகிஸ்தான் ராணுவத்தின், செய்தித் தொடர்பாளரான, மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர்,
இன்று காலை நிருபர்களிடம் பேட்டி அளிக்கும்போது, பாகிஸ்தான் நாட்டின்
தரைப் படையினர் இந்திய விமானிகள் இருவரை கைது செய்துள்ளனர். அதில் ஒருவர்
மிலிட்டரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மற்றொருவர்
ராணுவத்தின் பிடியில் உள்ளார். இன்று நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை சுய
பாதுகாப்பு தான். இதில் வெற்றி என்று நாங்கள் எதையும் கொண்டாடப் போவதில்லை
என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் செய்தி உண்மைதானா என்பதை விசாரித்து வருவதாக
இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், இன்று காலை
நிருபர்களிடம் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment