
ஜம்மு-காஷ்மீர்:காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா
உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. ஆனால்,
பாகிஸ்தானும், சீனாவும் மவுனமாக உள்ளன.
ஜம்மு காஷ்மீர், புல்வாமா
மாவட்டம், அவந்திபோரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் வாகனத்தில் சென்று
கொண்டிருந்தனர். அப்போது, காரில் சென்ற தீவிரவாதி, திடீரென பாதுக்காப்பு
படை வீரர்கள் வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார்.
பயங்கர
தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 44 ஆக
உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில்,
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள்
கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல்
கண்டனத்திற்குரியது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
மேலும், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர்
இரங்கல் தெரிவித்தார்.
அதேபோல், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு
நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீரர்கள்
உயிரிழப்புக்கு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல்
தெரிவித்துள்ளார். வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ரஷ்யா, அமெரிக்கா,
பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு
செய்துள்ளன.
ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும்
தீவிரதாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால்.... பாகிஸ்தானும்,
சீனாவும் இந்த தாக்குதல் குறித்து எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்காமல்
மவுனமாக உள்ளன. ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் காஷ்மீரில் தீவிரவாதிகள்
தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், இந்த
தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment