Latest News

ஜம்முவில் செல்போன் இணைய சேவை முடக்கம்

ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மாலை 78 வாகனங்களில் சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நடைபெற்ற தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, நேற்று தெற்கு காஷ்மீர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய வேகம் 2 ஜியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஜம்முவில் செல்போன் இணையதளசேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.