
அதிமுக, பாஜக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே, பாஜகவின்
வளர்ச்சிக்கு துணை போக மாட்டோம் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த கூட்டணியை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து
வருகின்றன. அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்களிடையே இந்த கூட்டணி கருத்து
வேறுபாட்டை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், கரூர் ஏமூரில் துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தீவிரவாதிகளை ஒழித்து கட்டிய
இந்திய ராணுவ வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது.
நடவடிக்கை
நாட்டின் மரியாதையை காக்க பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அந்த செயல்பாடுகளை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.
ராணுவ வலிமை
தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக போர் செய்ய முனைந்தால்
அதனை எதிர்கொள்ளும் வலிமை இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது. காங்கிரஸ்,
திமுக கூட்டணியை எதிர்கொள்ள பாஜக எங்களுக்கு துணை நிற்கிறது.
வளர்ச்சி
இது தேர்தலுக்கான கூட்டணி. கொள்கைக்கான கூட்டணி அல்ல. கூட்டணியை காரணம் காட்டி பாஜகவின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போக மாட்டோம்.
அதிமுக கொள்கை
மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம். அந்த கொள்கையில் பின் வாங்கப்போவதில்லை என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment