
இந்தியாவின் முப்படைகளும், பாகிஸ்தானின் சவாலை எதிர்கொள்ள தயாராக
இருப்பதாக இன்று அறிவித்துள்ளன.
ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மஹல், விமானப்படை சார்பில்
ஆர்ஜிகே,கபூர், கடற்படை சார்பில் தல்பீர் சிங் குஜ்ரால் ஆகியோர் டெல்லியில்
இன்று இரவு 7 மணிக்கு, கூட்டாக நிருபர்களிடம் பேட்டியளித்தனர்.
அப்போது, பாகிஸ்தானின் எப் 16 விமானம் இந்தியாவில் தாக்குதல் நடத்தி
தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான, ஆதாரங்களை
வெளியிட்டனர்.
தல்பீர் சிங் குஜ்ரால் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய கடற்படை தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மேலும், கடலுக்கு அடியிலும் இந்திய
கடற்படை தயாராக உள்ளது. கடல் வழியாக பாகிஸ்தான் எந்த தாக்குதல்
நடத்தினாலும் விரைந்து, பதிலடி தரப்படும் என்றார்.
சுரேந்திர சிங் மஹல் கூறுகையில், முப்படைகளும் இந்திய மக்களை பாதுகாக்க
முழு வீச்சில் தயாராக உள்ளன. இந்திய ராணுவம் முழுமையாக தயார் நிலையில்
உள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி எல்லையில் தாக்குதல்களை நடத்தி
வருகிறது. பாகிஸ்தானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் ரெடியாக
உள்ளோம். அமைதி மற்றும் நிலைத்தன்மையே இந்திய ராணுவத்தின் விருப்பம்
என்றார்.
No comments:
Post a Comment