
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் தங்களது ஒற்றுமையை காட்டி வருகிறார்கள். இந்நிலையில்,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை
கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்பட
பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளம்
மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும்
மிகவும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். 'கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது
செய்வதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகளை ஏவிவிட்ட கீழ்த்தரமான
அரசாங்கத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.
இந்தியாவில் ஜனநாயகம் இன்று மோடிநாயகமாக மாறிவிட்டது.
நாட்டுக்காக எனது கட்சியையும், உயிரையும் தியாகம்
செய்யவும் தயாராக இருக்கிறேன். மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மீண்டும்
வராதவாறு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக போராடும்'
என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment