Latest News

எல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்..? மிரட்டும் வருமான வரி துறை..? நமக்கு என்ன லாபம்..?

ஒவ்வொரு நிதி ஆண்டு முடிந்த உடனேயே வருமான வரித்துறையிடமிருந்து "இந்த நாடு வலர வரி தாக்கல் செய்யுங்கள்" என்கிற ரீதியில் விளம்பரங்கள் வரும்.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தொடர்ந்து மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ் செய்திகள் மூலம் நம்மை பயமுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

இந்த டெக்னிக் கடந்த 2017 - 18 நிதி ஆண்டுக்கு ஆகஸ்ட் 2018-க்குள் தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. இந்த காலத்தில் மட்டும் சுமார் 95 லட்சம் பேரை புதிதாக வருமான வரி தாக்கல் செய்ய வைத்தது வருமான வரித் துறை
ஏன்..?
 

ஏன்..?

எல்லாம் அபராதம் என்கிற ஒற்றை விஷயம் தான். வருமான வரித் துறைச் சட்டம் 234 -ன் படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வருமான வரி சொல்லும் நேரத்துக்குள் தங்கள் வருமான வரியை செலுத்தி வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 5,000 ரூபாய் அபராதத்தோடு டிசம்பர் 31-ம் தேதி வரை காலக் கெடு கொடுக்கப்படுகிறது. அப்படியும் வரி செலுத்தாதவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் 10,000 ரூபாய் அபராதத்தோடு வரி தாக்கல் செய்ய வேண்டும்.

நோட்டீஸ்

இப்போது பலருக்கும் "மதிப்புக்குரிய XXXXX, வருமான வரிச் சட்டம் 139-ன் கீழ் நீங்கள் கடந்த நிதி ஆண்டுக்கு வந்த வருமானத்தை கணக்கில் காட்டி வருமான வரி தாக்கல் செயய்வில்லை. விரைவில் 10,000 ரூபாய் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்யவும். இப்படிக்கு வருமான வரித் துறை" என நோட்டிஸ் வந்து கொண்டிருக்கிறது. அலரி அடித்துக் கொண்டு ஆடிட்டர்களை நோக்கி படை எடுக்கிறார்கள். சரி முதலில் வருமான வரிச்சட்டம் 139 என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.

வருமான வரிச் சட்டம் பிரிவு 139

இந்த சட்டத்தில் யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும், ஒரு நிதி ஆண்டில் எவ்வளவு ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் வரி தாக்கல் செய்ய வேண்டும். சிலருக்கு ஒரு நிதி ஆண்டில் அரசு சொல்லி இருக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என்றால் கூட அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்..? ஏன் என விரிவாக இருக்கிறது. ஆக பிரிவு 139-ன் படி யார் எல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.

யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும் 1

சொந்தமாகவோ அல்லது வாடகை கொடுத்தோ 2000 சதுர அடிக்கு மேல் கார்பெட் ஏரியா உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு மாதம் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் இல்லை என்றால் கூட வரி தாக்கல் செய்ய வேண்டும்.

யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும் 2

சொந்தமாக இரு சக்கர வாகனங்களைத் தவிர வேறு எந்த விதமாக மோட்டார் வாகனங்களை வைத்திருந்தாலும் அவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் ஆட்டோ, லோட் வாகனங்கள், சின்ன யானை (டாடா ஏஸ்) போன்ற வணிக ரீதியிலான வாகனம் வைத்திருப்பவர்கள் என அனைவரும் அடக்கம். இவர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வரவில்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும் 3

ஒரு நிதி ஆண்டில் (01 ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டில் மார்ச் 31 வரை) மொத்தமாகவோ அல்லது மாதாமாதமோ க்ளப்களுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களும் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும் 4

ஒருவருக்கு சொந்தமாகவோ அல்லது வாடகை கொடுத்தோ 300 சதுர அடிக்கு மேல் வணிக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடை, உற்பத்தி ஆலைகள், அலுவலகங்களை வைத்திருப்பவர்கள் கூட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும் 5

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, மகன், மகள் என நான்கு பேர் வெளிநாடு பயணிக்கிறார் என்றால்... அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. குறிப்பாக பான் அட்டை உள்ளவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டால் நிச்சயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

யார் எல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும் 6

க்ரெடிட் கார்ட் என்கிற கடன் அட்டை. தங்கள் பெயரில் ஒரு க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். காரணம் கடன் வாங்குகிற அளவுக்கு பணப் புழக்கம் இருக்கும் ஒரு நபர் ஏன் வருமான வரி தாக்கல் செய்யக் கூடாது என்பது வருமான வரித்துறையின் கேள்வி. ஆக இவர்களுக்கும் ஒரு நிதி ஆண்டில் 5,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

வேறு யார் எல்லாம்..?

இதற்கு மேல் சாதாரணமாக கடை நடத்துபவர்கள், சின்ன சின்ன வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள், பான் அட்டை வைத்திருப்பவர்கள், குறிப்பாக ஆண்டுக்கு 5,00,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் அனைவருமே கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். சரி இத்தனை மிரட்டி நம்மிடம் இருந்து வருமான வரி தாக்கல் செய்யச் சொல்கிறார்களே... நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா..? இருக்கிறதே.. மேற்கொண்டு படியுங்கள்.

வங்கிக் கடன்கள்

பொதுவாக வேலைக்கு சேர்ந்து சில வருடங்களுக்குப் பின் தான் வீட்டுக் கடனை அடைக்க அலது தங்கை திருமணத்துக்கு அல்லது நம் திருமணத்துக்கு என பணம் தேவைப்படும். அப்போது வங்கிகளிடம் கேட்டால் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறீர்களா எனக் கேட்பார்கள். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் நாம் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் கடன் கிடைப்பது 75% உறுதி. காரணம் நம் 3 வருட வருமானத்தை அவர்கள் கண்ணால் பார்த்துவிட்டார்கள். அதை அரசிடமும் நாம் கணக்கு காட்டி இருக்கிறோம் என்பதால் நம் மீதான நம்பகத் தன்மை அதிகரித்துவிடும்.

உங்கள் வருமானத்தைப் பெற

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஏதாவது பகுதி நேர பிசினஸாக எதையாவது செய்யும் நடுத்தர மக்களை நாம் அதிகம் பார்க்க முடியும். உதாரனமாக மாத சம்பளத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளாக இருப்பது, பத்திரிகைகளில் கட்டுரை,கதை, கவிதைகளை எழுதுவது, பேச்சாளர்களாக மேடைகளில் பேசி சம்பாதிப்பது, பகுதி நேரங்களில் வகுப்பு எடுப்பது என பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள்.

டிடிஎஸ் - Tax Deducted at Source

இவர்களில் பலருக்கும் பகுதி நேர வேலைகள் மூலம் ஒரு பகுதி வருமானம் வரும். ஆனால் அதற்கு பெரும்பாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு வரும். ஆக இந்த பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை மீண்டும் பெற நாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். நமக்கு ஆண்டு வருமானம் 5,00,000 ரூபாய்க்கு கீழ் என நாம் தாக்கல் செய்தால் தானே நமக்கு பணத்தை திருப்பித் தருவார்கள் அதற்குத் தான் வரி தாக்கல் செய்யச் சொல்கிறார்கள்.

நம் இறப்பின் போது நம் குடும்பத்துக்கு காசு கிடைக்க

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படி ஒரு சாலை விபத்தில் நாம் இறந்துவிட்டால் நமக்கு மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் கிடைக்கும். சுமார் 5 லட்சம் ரூபாய் தொடங்கி 2 கோடி ரூபாய் வரை இந்த க்ளெய்ம் கிடைக்கும். இந்த கெளெய் தொகையை இறப்பவரின் வயது, அவரின் வருமானம். அவரை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை ஆகியவைகளைப் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொடுக்கும்.

தாக்கல் செய்திருந்தால்

இப்போது நம் இறப்புக்குப் பின் நம் வருமானத்தை நிரூபிக்க வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்களா எனக் கேட்பார்கள். வருமான வரி தாக்கல் செய்திருந்தால் க்ளெய்ம் உறுதி. காரணம் வருமான வரி தாக்கல் செய்திருக்கும் படிவம் ஒரு அரசு ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எனவே வேலை வேகமாக முடிந்து நம் க்ளெய்ம் தொகையும் நம் குடும்பத்துக்கு முறையாகச் சென்று சேரும். அப்படிஒருவேளை நாம் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் நம் குடும்பத்தினர் நம் பழைய அலுவலகத்துக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குமாக ஆண்டு கணக்கில் நடக்க வேண்டி இருக்கும்.

tamil.goodreturns.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.