
ஓரிரு நாட்களில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்
என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவிலிருந்து பாஜக தலைவர் அமித்ஷா தனி விமானம் மூலம் மதுரை வந்தார்.
பின் பாஜக, லோக்சபா தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில்
பங்கேற்றார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன், துணை
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 2 முறை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது
முரளிதரராவ், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, ஓபிஎஸ், பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவுடன் தமிழ் மாநில
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால்
இதனை வாசன் திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஜி.கே.வாசன் பின்னர்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: லோக்சபா
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்
கட்சிகளும் கூட்டணி குறித்து பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில கட்சிகள் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் கூட்டணியை
இன்னும் முழுமைப் படுத்தவில்லை.
அதனடிப்படையில் ஒருமித்தக் கருத்துடைய கட்சிகளுடன் பேசி கூட்டணி
அமைக்கப்படும். இரண்டு மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை
நடத்தி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
No comments:
Post a Comment