Latest News

யாதுவின் கனவை நனவாக்குவோம்.. 8 வயது சிறுவனுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்!

 Come and help Yadu to realise his dream
யாது என்ற 8 வயது சிறுவன் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சேரிப் பகுதியில் வசித்து வருகிறான். அவனுடைய அப்பா ஒரு தினசரி கூலித் தொழிலாளி. இதனால் என்னவோ யாதுவால் சிறுவயதிலேயே படிக்க முடியாத சூழல் இருந்தது. அவனுக்கு படிக்கும் ஆர்வம் இருந்த போதிலும் அது அவனுக்கு கிடைக்கவில்லை.. அவனுக்கு விளையாட்டு என்றால் பிடிக்குமாம். அவனுடைய பெரிய கனவே ஒரு நாள் புகழ்பெற்ற விளையாட்டு வீரராக வலம் வர வேண்டும் என்பதே என்கிறான். அவனுடைய அம்மா அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று வீட்டு வேலைகளை செய்து வருகிறார். யாது அவர் அம்மாவுடன் வேலைக்கு செல்லும் போதெல்லாம் தன்னுடைய கனவை நனவாக்க தவறாமல் அங்கிருக்கின்ற வீட்டு குழந்தைகளுடன் விளையாடவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறான். அதற்கு யாதுவுக்கு உதவுங்கள். இங்கே உதவலாம்.
 
'படிக்கின்ற குழந்தை எங்கிருந்தாலும் படிக்கும்' என்பார்கள். யாதுவும் அப்படித் தான். அவனுடைய அறிவை பார்த்த பலரும் யாதுவின் அம்மாவிடம் அவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் அவர்களின் குடும்ப நிலையோ ஏழ்மையில் உள்ளது. ஒரு வேளை உணவிற்கு கூட நிறைய வீடுகளில் வேலை செய்து தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கையில் யாதுவால் எப்படி பள்ளிக்கு செல்ல முடியும்.

ஆனால் இந்த நிலை தற்போது மாற்றம் அடைந்துள்ளது. யாதுவின் திறமையை வளர்க்க ஒரு வழி அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஒரு நாள் வேலை செய்யும் வீட்டில் உள்ள பெண்மணி ' யாது படிப்பிற்கு பணம் ஒரு தடையல்ல, அருகில் உள்ள அரசாங்க பள்ளியில் கல்வியோடு ஒரு வேளை உணவும் வழங்கப்படுகிறது' என்று யாதுவின் அம்மாவிடம் இதை கூறியுள்ளார். இனி உன் பையன் படிப்பை பற்றியோ உணவை பற்றியோ நீ கவலைப்படத் தேவையில்லை என்றார். அதன்படி யாதுவும் எல்லா குழந்தைகளைப் போலவே பள்ளி சென்று வருகிறான்.

இன்றோடு யாது மூன்று வருடங்களாக தன்னுடைய கனவை சுமந்த வண்ணம் பள்ளி சென்று வருகிறான். ஒரு குழந்தை பருவத்தில் கிடைக்கும் அத்தனை விஷயங்களும் இப்பொழுது யாதுவுக்கும் சாத்தியமாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவை பள்ளி அவனுக்கு வழங்குகிறது. இந்த மதிய உணவளிக்கும் திட்டம் 'அன்னமிர்தா' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே ஏழ்மையில் சிக்கி ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கல்வியும் பயில முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

இதற்காக உலகம் முழுவதும் தனி நபர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என்று இத்திட்டத்தை சிறப்பாக நடத்த ஏராளமானோர் நிதியுதவி செய்து வருகின்றனர். யாதுவைப் போல ஒரு குழந்தை இல்லை இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் கனவுகளைக் குழந்தைப் பருவத்திலேயே தொலைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல கல்வியறிவையும் ஒரு வேளை பசியாற உணவையும் வழங்குவது நம் மனிதநேய கடமை. யாதுவைப் போல ஏக்கத்துடன் ஏங்கி நிற்கும் ஏராளமான குழந்தைகளுக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள். யாதுவின் கனவு வெகுதூரம் இல்லை. நாம் நம் உதவிக் கரங்களை இணைத்தால் அவனும் ஒரு நாள் உலகம் போற்றும் விளையாட்டு வீரன் ஆவான்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.