
சென்னையில் செயல்பட்டு வரும் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் காலியாக
உள்ள சுருக்கெழுத்தாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு
பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.65 ஆயிரம்
வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது
தேர்ச்சியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையவும்.
எழுதப்படிக்கத் தெரியுமா? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை- தமிழக அரசு!
மேலாண்மை : சிறு வழக்குகள் நீதிமன்றம், சென்னை
நிர்வாகம் : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 74
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
சுருக்கெழுத்தர் : 07
தட்டச்சர் : 09
இளநிலை உதவியாளர் : 06
முதுநிலை அமினா : 04
இளநிலை அமினா : 06
செயல்முறை எழுத்தர் : 03
அலுவலக உதவியாளர் : 38
காவலர் : 01
கல்வித் தகுதி:-
சுருக்கெழுத்தர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான
கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும்
சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ்
மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அல்லது முதுநிலை மற்றும் இளநிலை தேர்ச்சி
பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தட்டச்சர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான
கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும்
தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர், முதுநிலை அமினா, இளநிலை அமினா, செயல்முறை எழுத்தர்
பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம்:-
சுருக்கெழுத்தர் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
தட்டச்சர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
இளநிலை உதவியாளர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
முதுநிலை அமினா : ரூ.19.500 முதல் ரூ.62,000 வரையில்
இளநிலை அமினா : ரூ.19.000 முதல் ரூ.60,300 வரையில்
செயல்முறை எழுத்தர் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்
அலுவலக உதவியாளர் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
காவலர் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : www.districts.ecourts.gov.in/chennai என்ற
இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி
செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
தலைமை நீதிபதி,
சிறு வழக்குகள் நீதிமன்றம்,
உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை - 104
அனைத்து தகவல் பரிமாற்றங்களும் (தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு விண்ணப்பம்
ஏற்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது) போன்ற அனைத்து விவரங்களும்
www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடை தேதி : 08.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்
பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files /Paper%20publication%202019%20final.pdf
என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment