Latest News

  

அதிராம்பட்டினத்தில் பொது இ-சேவை மையத்தில் 200 சேவைகள் தொடக்கம் (படங்கள்)


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.ஷேக் அப்துல்லாஹ். இவர், பேருந்து நிலையம் அருகே சேது ரோட்டில் (சாரா திருமணம் மண்டபம் வளாகத்தில்) 'எவர் கிரீன் கஸ்டமர் கேர்' என்ற பெயரில் புதிதாக அரசின் அங்கீகாரம் பெற்ற பொது இ சேவை மையத்தின் புதிய கிளையின் தொடக்க விழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், 'எவர் கிரீன் கஸ்டமர் கேர்' நிறுவனர் ஏ.ஷேக் அப்துல்லா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் பொது இ-சேவை மையத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், இந்தியா யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், துணைச் செயலாளர் அபுபக்கர், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர். ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இதுகுறித்து 'எவர் கிரீன் கஸ்டமர் கேர்' நிறுவனர் ஏ. ஷேக் அப்துல்லா கூறியது;
'அரசின் அங்கீகாரம் பெற்ற எங்களது பொது இ சேவை மையத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது. இனி பொதுமக்கள் தொலை தூரங்களில் உள்ள தாலுகா உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று நேரம், பொருளாதரம் போன்றவற்றை வீண் விரையம் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. எங்களது சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவற்றை புதிதாக விண்ணப்பிக்க / திருத்தங்கள் செய்ய, பஸ், ரெயில், விமானம் ஆன்லைன் டிக்கெட், ரீசார்ஜ், மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்துதல், சிறுதொழில் பதிவு, வேலை வாய்ப்பு பதிவு, ஜி.எஸ்.டி சேவை, காணாமல் போன ஆவணங்கள் பதிவு, பத்திரப்பதிவு கணினி கட்டணம் செலுத்துதல், டிரைவிங் லைசன்ஸ் பதிவு, டோல்கேட் கார்டு, கார் பைக் இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
 
 நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.