தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குட்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுத்து வரும் நிலையில் திருப்பூரில் உள்ள லிங்கம் என்பவருக்கு சொந்தமான
கிடங்கில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி
வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து
அதிரடியாக லிங்கம் என்பவரின் கிட்டங்கில் சோதனை செய்த போலீசார், பலமணி
நேரம் சோதனைக்கு பின்னர் கிடங்கில் இருந்து 1 டன் குட்கா பொருட்கள் மற்றும்
உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள்
ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கிடங்கு உரிமையாளர் லிங்கம் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த குட்கா மற்றும் பட்டாசு பொருட்கள் அவருக்கு
சொந்தமானதா? அல்லது பினாமியாக அவர் இந்த பொருட்களை பாதுகாத்து
வைத்திருக்கின்றாரா? என்ற ரீதியில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ்
வட்டாரங்கள் கூறுகின்றன.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment