
தமிழகம் முழுவதும் அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி
நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவிலிருந்து நிலத்தடி
நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி
உரிமையாளர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில்
அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள்
தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட கேன் குடிநீர்
உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முரளி அறிவிப்பை வெளியிட்டார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''குடிநீர் கேன் உற்பத்திக்காக நிலத்தடி
நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை விலக்க வேண்டும். சென்னையில்
மட்டும் 90 சதவிகித மக்கள் கேன் குடிநீரை நம்பியிருப்பதால், மக்கள்
கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குடிநீர் என்பது அத்தியாவசியமான ஒன்று. அதனை
கருத்தில் கொண்டு குடிநீருக்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க
வேண்டும்''என்று தெரிவித்தார்
ஏற்கெனவே
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர்
லாரிகள் ஓடவில்லை. இந்நிலையில் அடைக்கப்பட்ட கேன் குடிநீர்
உற்பத்தியாளர்களும் உற்பத்தியை நிறுத்தியிருப்பதால் குடிநீருக்காக மக்கள்
பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment