
அவரின் உணர்ச்சிமிகு உரைகளை யூ-டியூப்பில் பார்த்து அதன் விளைவாக
இயற்கை விவசாயத்தில் கால் வைத்த இளைஞர்கள் ஏராளம். அவர்களில் திண்டுக்கல்
கார்த்திகைவேலும் ஒருவர்.
என்ஜினீயரிங்
படித்துவிட்டு கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த
கார்த்திகைவேல் நம்மாழ்வாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தற்போது சொந்த
கிராமத்திலேயே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூர் தாலுகாவில் உள்ள விருதலைப்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும்
கார்த்திகைவேலை காலை நேரத்தில் சந்தித்தோம். அவர், வேடசந்தூர் பேருந்து
நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்துக்கு அழைத்து
சென்றார். செல்லும் வழியெங்கும் இருபுறமும் சரளை கற்கள் நிறைந்த செம்மண்
பூமியாக இருந்தது.

No comments:
Post a Comment