
கூட்டணியில்
தொகுதிகளுக்காக கெஞ்சிக் கொண்டே இருப்பதைவிட பகுஜன் சமாஜ் தனித்து
போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
மத்தியப்
பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய
மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 7ம்
தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முதல்கட்டமாக மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர்,
ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும். மிசோரம், தெலுங்கானா
மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களில் பதிவாகும்
வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள்
அறிவிக்கப்படும்.
இதில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் மத்தியப்
பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் - பகுஜன்
சமாஜ் இடையே கூட்டணி அமையும் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால்,
இருகட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. அதனால்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் கட்சியுடன்
இணைந்து போட்டியிடப் போவதாக மாயாவதி தடாலடியாக அறிவித்தார். அதனால்,
கிட்டதட்ட காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை
முற்றுபெற்றுவிட்டதாக தோன்றியது. மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் உடன்
கூட்டணி இல்லையென மாயாவதியே கூறிவிட்டார்.
இந்நிலையில்,
கூட்டணியில் தொகுதிகளுக்காக கெஞ்சிக் கொண்டே இருப்பதைவிட பகுஜன் சமாஜ்
தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். பகுஜன்
சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சி ராம் நினைவு அனுசரிப்பு நிகழ்ச்சியில்
பேசிய மாயாவதி, “தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள்,
முஸ்லீம்கள், மற்ற சிறுபான்மை மற்றும் உயர்சாதியில் உள்ள ஏழை மக்களின்
சுயமாரியாதை விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஒருபோதும் சமரசம் செய்யாது.
அதனால் தான் பகுஜன் சமாஜ் கௌரவமான தொகுதிகளை கேட்டது” என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment