
அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் நடத்தி வந்தவர் சங்கரன்
(வயது45). திருச்செங்கோடு அருகே உள்ள நல்லகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த
இவர் மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி அவென்யூவில்
குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவருக்கும் மனைவிக்கும் சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
நேற்று
வழக்கம் போல் அண்ணாநகரில் உள்ள பயிற்சி மையத்துக்கு வந்து விட்டு இரவில்
வீட்டுக்கு சென்றார். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியுடன்
தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சங்கர் மனம் வெறுத்து வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதை
கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள்
துணையுடன் சங்கர் உடலை இறக்கி அருகில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு கொண்டு
சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக
தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து மனைவியும் 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.
அவரது
உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடலை சொந்த ஊருக்கு
கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நடிகர்
கருணாஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
குறுகிய
காலத்தில் புகழ் பெற்ற சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 900-க்கும்
மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று மத்திய- மாநில அரசு பணிகளில் பல்வேறு
நிலைகளில் அதிகாரிகளாக உள்ளனர். இப்போது 1500-க்கும் மேற்பட்ட
மாணவ-மாணவிகள் இவரது மையத்தில் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில்,
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் நிறுவனர் சங்கரன் மறைவிற்கு திமுக
தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
நாட்டின்
நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான 1000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல
அரசு அதிகாரிகளை உருவாக்கியவர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர்.
சங்கர் மறைவு கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய
ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்துக்கும்
அதிகமான ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கி சென்னையிலும்
வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய
சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வெழுத வரும் அனைவருக்கும் பேரிழப்பு! pic.twitter.com/qgp56G7yUa
கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வெழுத வரும் அனைவருக்கும் பேரிழப்பு! pic.twitter.com/qgp56G7yUa
No comments:
Post a Comment