முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி
தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த விசாரணை
கமிஷனுக்கு இரண்டு முறை கால அவகாசம் நீட்டித்த நிலையில் தற்போது மேலும் 4
மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து
விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி இதுகுறித்து
கூறியபோது, 'ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று
கொண்டு இருப்பதாகவும் இதில் எவ்வித காலதாமதமும் இல்லை என்றும், விசாரணையில்
பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் தொடர்புடையவர்களிடம்
விசாரிக்க வேண்டியுள்ளதால் இன்னும் நான்கு மாத கால அவகாசம் கேட்டு அரசுக்கு
கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார், . எனவே தமிழக அரசு இந்த விசாரணை ஆணையத்திற்கு மேலும் அவகாசம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment