
மதுரை
குருவித்துறை குருபகவான் கோவிலில் சினிமா பாணியில் பல கோடி ரூபாய்
மதிப்பிலான, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மதுரை,
சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் உள்ளது குருபகவான் கோவில்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி, வல்லபபெருமாள்,
சீனிவாசபெருமாள் ஆகிய சுவாமி சிலைகள் உள்ளன.
இந்நிலையில் சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள்
கூட்டத்திலேயே 2 கொள்ளையர்களும் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர். 2 மர்ம
நபர்களும் கோவிலுக்குள் ரகசிய இடத்தில் மறைந்துள்ளதாக தெரிகிறது. பின்னர்
கோவில் அர்ச்சகர், வீட்டிற்கு சென்றதும் மர்ம நபர்கள் சிலைகளை
கொள்ளையடித்துள்ளனர். முகத்தை மூடிக்கொண்டு ஸ்ரீதேவி, பூமாதேவி,
வல்லபபெருமாள், சீனிவாசபெருமாள் ஆகிய பழமையான 4 சிலைகளை துணியால் தங்களது
முதுகில் கட்டியபடி கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த
காட்சிகள் அனைத்தும் கோவிலில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு
கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்
கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மோப்பநாய் உதவியுடனும் காவல்துறையினர்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக கோவிலில் இருந்து
கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் பல்வேறு இடங்களில் இருந்தும் மீட்கப்பட்டு
வரும் நிலையில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள்
கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment