தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள மீதி ஒன்பது பேரை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக பிபிசிக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
18.54:தாய்லாந்து கடற்படை எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
மீட்பு
பணி நடக்கும் இடத்தில் இருந்து நமக்கு தகவல்கள் கிடைத்தபோதிலும் பல
மணிநேரமாக தாய்லாந்து அதிகாரிகள் செய்தியை உறுதிப்படுத்தாத நிலையில்,
தற்போது தாய்லாந்து கடற்படையானது எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதை
உறுதிப்படுத்தியுள்ளது. இன்றைய தினம் நான்கு பேர் மலைகுகையில் இருந்து
மீட்கப்பட்டுள்ளனர்.
https://www.facebook.com/ThaiSEAL/posts/1643694709087255
ஒரு பேஸ்புக் பதிவொன்றில் மீட்கப்பட்ட எட்டு சிறுவர்கள் விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
வைல்ட் போர்ஸ் என்ற கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் போர்ஸ் என அச்சிறுவர்களை குறிப்பிட்டுள்ளது தாய்லாந்து கடற்படை.
6.29: எட்டு சிறுவர்கள் குகையில் இருந்து மீட்பு
மீட்புபணியில் உள்ள ஒருவரிடம் இருந்து நமக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
- இன்று மீட்கப்பட்ட நான்கு பேரும் வைல்ட் போர்ஸ் கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள்.
- இதன் பொருள் என்னவெனில், அந்த சிறுவர்களின் 25 வயது பயிற்சியாளர் இன்னமும் குகை அமைப்புக்குள்தான் இருக்கிறார்.
- இன்றைய தினம் மீட்கப்பட்டவர்கள் நல்ல உடல்நிலையில்தான் உள்ளனர்.
- மீதமுள்ள நான்கு சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை செவ்வாய்கிழமையன்று மீட்க திட்டமிட்டுள்ளனர் மீட்பு குழுவினர்.
6.23:தெற்கு தாய்லாந்தில் இருந்து புகைப்படங்கள் வந்துள்ளன
தாம் லுவாங் குகையில் நடந்துவரும் மீட்பு பணிகள், தாய்லாந்தையும் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்குள்ள புகைப்படங்கள் இரண்டாம் கட்ட மீட்புபணிகள் நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்டன.
குகை பகுதிக்கு அருகே அவசர விமான ஊர்தி இறங்குவதை பார்க்கும் கூட்டம் சியாங் ராயில் விமானப்படை தளத்தில் இறங்கும் போலீஸ் ஹெலிகாப்டர்
திங்கள்கிழமையன்று நிறைய அவசர ஊர்தியை பிபிசி செய்தியாளர் பார்த்த இடமான
சியாங் ராயில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முன் இருக்கும் காவல்துறையினர்.
6.23:நான்கு பேர் இன்று மீட்கப்பட்டனர் - பிபிசியிடம் தெரிவிப்பு
மீட்புப்பணியில்
இருந்த ஒரு நபர் பிபிசியின் ஜோனாதன் ஹெட்டிடம் நான்கு சிறுவர்கள் இன்றைய
தினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
5.50:மேலும் இரண்டு அவசர ஊர்திகள் குகைப்பகுதியை விட்டு வெளியேறின.
பிபிசி
செய்தியாளர் ஜோனாதன் ஹெட் குகைப்பகுதியில் உள்ளார். ஆறாவது மற்றும் ஏழாவது
சிறுவர்கள் மீட்கப்பட்டதாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஆனால்
உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறார்.
5.40:உறுதிப்படுத்தப்படாத செய்திகள் மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றன
தாய்லாந்து
அதிகாரிகள் இன்றைய மீட்புபணியில் மீட்கப்பட்டவர்கள் குறித்து உறுதியாக
எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம்
பேசுகையில், திங்கள் கிழமையன்று இதுவரை நான்கு பேர் மீட்கப்ட்டதாக
தெரிவித்தனர். ஆகவே இதுவரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக
அதிகரித்துள்ளது.
5.20: மீட்கப்பட்ட
சிறுவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று
சிறுவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும்,
மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவர்கள்
பிற மாணவர்களை போன்றே நடத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"ஆனால் நடந்தவைக்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தமாட்டோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
5.10: நேற்று மீட்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் நான்கு சிறுவர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது
சிகையில் இருக்கும் சிறுவர்களின் குடும்பத்துக்கு மரியாதை வழங்கும் விதமாக
மீட்கப்பட்ட சிறுவர்களின் பெயர்கள் வெளியிடபடவில்லை.
நல்ல உடல்நலத்துடன் இருக்கும் சிறுவர்கள் உண்பதற்கு `பிரைட் ரைஸ்` கேட்டதாக மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/BBCnewsTamil/videos/10155336453635163/
5.00 : சியாங் ராய் மருத்துவமனைக்கு விரைந்தது அவசர ஊர்தி
மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் சியாங் ராய் மருத்துவமனைக்கு வெளியே பிபிசியின் மார்ட்டின் பேஷன்ஸ் இருக்கிறார்.
மருத்துவமனைக்கு
தற்போது ஒரு அவசர ஊர்தி வந்துள்ளது. திங்கள் கிழமையன்று துவங்கிய
இரண்டாவது கட்ட மீட்பு பணியில் குகையில் இருந்து ஐந்தாவது நபர்
மீட்கப்பட்டதாக கருதப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தாய்லாந்து அதிகாரிகள் இதுவரை ஐந்தாவது நபர் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.
4.45: இரண்டாவது கட்ட மீட்புப்பணி துவங்கியது
புதிய
காற்று கலம் கொண்டுவருவதற்காகவும், மீட்பு பகுதியில் உள்ள பாதையில்
வழிகாட்டி கயிறுகளை இறுக்கமாக கட்டுவதற்கும் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டிருந்த மீட்பு பணியானது, குகையில் இருந்து ஐந்தாவது நபரை
மீட்பதற்காக மீண்டும் துவங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கடந்த
ஞாயற்று கிழமை நடந்த முதல் கட்ட மீட்பு பணியில் நான்கு சிறுவர்கள்
மீட்கப்பட்டனர். தேர்ந்த முக்குளிப்பவர்களின் உதவியுடன் எதிர்பாராத
அபாயங்கள் நிறைந்த நீர் வழித்தடம் வழியே அவர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு
பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மீதமுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களின்
பயிற்சியாளரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர வழிகாட்டவுள்ளனர்.
தாய்லாந்து
மற்றும் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த
முக்குளிப்பவர்களை கொண்ட மீட்பு குழுவானது தற்போது குகையில்
மாட்டிக்கொண்டவர்களை வேகமாக மீட்க முயற்சி செய்துள்ளது. கடும் மழைப்பொழிவு
தற்போது எதிர்பார்க்கப்படுகிறது மேலும் குகையில் சிறுவர்கள் மற்றும்
அவர்களது பயிற்சியாளர்கள் சிக்கியுள்ள இடத்தில் ஆக்சிஜன் அளவு அபாயகரமான
வகையில் குறையத் துவங்கிவிட்டது.
4:30 தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள மீதி ஒன்பது பேரை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக பிபிசிக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குகையிலிருந்து மீட்கப்பட்ட நான்கு சிறுவர்கள் "நல்ல உடல்நிலையில்" உள்ளதாக தெரிகிறது.
நேற்று
இரவு அங்கு பெய்த கனமழையின் காரணமாக குகையில் ஏற்கனவே நீர் சூழ்ந்துள்ள
பகுதிகளின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் அங்கு சிக்கிலுள்ள
எஞ்சியவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதுவரை நடந்தது என்ன?
தாய்லாந்தில்
சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம்
தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும்
அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால்
உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.
இந்த
விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு
வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும்,
குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.
- தாய்லாந்து குகை: 4 சிறுவர்கள் மீட்பு, மற்றவர்ளை மீட்க ஆயத்தமாகும் குழு
- தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: இதுவரை நடந்தது என்ன?
9
நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு
வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில்
இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.
தாய்லாந்து
கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில்
சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.
இது
மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி
என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள்
காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில்
கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும்
அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும்,
சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று
முடிவெடுத்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு
முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது.
மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு
கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு
சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
சிறுவனின்
காற்றுக் குடுவையை ஒரு மீட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு,
மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும்
சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம்
பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த
உதவியாக இருக்கும்.
மேற்கண்ட திட்டத்தின்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான்கு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
No comments:
Post a Comment