
அவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா
சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டிப்பு காட்டினார்.பார்லி.லோக்சபாவில் பா..ஜ.
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங். தலைவர் ராகுல்
பேசினார். அப்போது மோடி அரசையும், கடுமையாக சாடினார். ஆவேசமாக பேசி முடித்த
ராகுல் திடீரென மோடி இருக்கையை நோக்கி சென்று அவரை
கட்டிப்பிடித்தார்.பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் சக
உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டே கண்ணடித்தார். ராகுலின் செயல் கேரள நடிகை
பிரியா வாரியரை போல ராகுல் கண்ணடித்ததாக, சமூக வலைத்தளங்களில் கேலி
கிண்டலாக பரவியது,ராகுலின் செயலலை பார்த்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரை
கண்டிக்கும் விதமாக பேசியது, நான் யாரையும், யாரும் கட்டி பிடிக்க கூடாது
என கூற விரும்பவில்லை.
நானும் ஒரு தாய்தான். ஆனால், நடந்து கொண்ட விதம்தான்
சரியில்லை. இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பிறகு கண் அடிப்பது,
பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என
கண்டித்தார்.
No comments:
Post a Comment