Latest News

பாஜகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசிய அளவில் டிரெண்டிங் ஆன #WelcomeStalin ஹேஷ்டேக்..


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்பியதை கிண்டல் செய்து பாஜகவினர் பதிவு செய்த #GoBackStalin என்ற ஹேஷ்டேக்குக்கு போட்டியாக திமுகவினர் பதிவு செய்த #WelcomeStalin என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அதேபோல் பாஜக தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தபோது #GobackAmitshah டிரெண்டானது.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி இரவு தனது மனைவியுடன் லண்டன் சென்றார். லண்டனில் மு.க.ஸ்டாலின் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து அதன்பின்னர் இன்று சென்னை திரும்புகிறார். 
ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்புவதை ஒட்டி பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் #GoBackStalin (திரும்பிப்போ ஸ்டாலின்) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்

மோடி மற்றும் அமித்ஷா வருகையை ஒட்டி #GoBackModi மற்றும் #GoBackAmitShah ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரண்ட் ஆனதற்கு திமுக காரணம் என கருதி பாஜக இன்று ஸ்டாலினை எதிர்த்து கருத்து பதிவிட்டனர்.

ஆனால், #GoBackStalin-க்கு போட்டியாக திமுகவினர் #WelcomeStalin என்ற ஹேஷ்டெக்கை டிரெண்ட் செய்ய தற்போது தேசிய அளவில் அந்த ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. சுமார் 46 ஆயிரம் ட்விட்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிடப்பட்டுள்ளன.இரு தற்போது தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.