கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில்
திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு
பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினியில் இருந்து
திறக்கப்படும் நீரின் அளவு இன்று ஒரே நாளில் 3வது முறையாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 110 அடியை தொட்டு உள்ளது
. இதன் மொத்த கொள்ளளவு 124.80 அடி இதனால் காலையில் 38,000 கனஅடி நீர்
திறக்கப்பட்டு வந்த நிலையில் பிற்பகலில் 45,000 கனஅடியாகவும், மாலையில்
50,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின்
நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment