உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு
மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து
லட்சக்கணக்கானோர் சுற்றுலாப்பயணிகளை காண வருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள
பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு
தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட
தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.
தாஜ்மஹாலை
உரியமுறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும்,
இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும், உச்ச நீதிமன்றத்தில்
பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை
உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள்
பிறக்கப்பட்டபோதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை. தாஜ் காரிடார் என்ற
பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி
மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று
விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு மற்றும்
உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடிய, தாஜ்மஹாலை பாதுகாக்க உரிய
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில்
தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது
நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா
பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான
நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி
விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம்.தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய
அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது. அதுபோலவே தாஜ்மகாலை பாதுகாக்க
நீண்டகால அடிப்படையில் திட்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்கவில்லை” என
நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment