Latest News

ஆசிரியையின் தலையை துண்டித்து 5 கிமீ ஓடிய மனநலம் குன்றிய நபர்.. அலறிய மக்கள்.. ராஞ்சியில் பயங்கரம்

ஜார்கண்டில் பள்ளி ஆசிரியை ஒருவரின் தலையை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஞ்சி: ஜார்கண்டில் பள்ளி ஆசிரியை ஒருவரின் தலையை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் செராய்கெலா மாவட்டத்தில் வசித்து வருபவர் சுக்ரா ஹெசா. 30 வயதனா இவர் கபரசாய் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளியில் குழந்தைகள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆசிரியை இதனை கண்காணித்து கொண்டிருந்தார்.
டீச்சரை இழுத்து சென்றார் அப்போது அந்த இடத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் வேகமாக ஓடி வந்தார். திடீரென ஆசிரியையின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றுள்ளார்.
தலை தனியாக துண்டிப்பு
தனது வீடு வரை இழுத்துச்சென்ற அந்த மர்ம நபர் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, ஆசிரியையின் தலையை மட்டும் தனியாக துண்டித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வனப்பகுதிக்குள் ஓடினார்
சிலர் அருகில் செல்ல தைரியம் இல்லாமல் அவர் மீது கற்களை வீசித் தாக்கினர். இதனால் அச்சமடைந்த அந்த நபர் உடனே ஆசிரியையின் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் எடுத்துக்கொண்டு ஹிசெல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஓடியுள்ளார்.
5 கிமீ தூரம் வரை
சுமார் 2 மணி நேரம் 5 கிமீ தூரம் வரை துண்டித்த தலையுடன் அந்த நபர் வெறிபிடித்தது போல் ஓடியுள்ளார். இதனால் பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், மர்ம நபரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரது பெயர் ஹரி ஹெம்ப்ராம் என்பதும் வயது 26 என்பதும் தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதி
அப்போது போலீசாரின் பிடியில் இருந்த ஹரி மீது, பொதுமக்கள் சிலர் பலமாக தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஹரி தற்போது ஜாம்செட்பூரிலுள்ள சடார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீளாத மக்கள்
ஆசிரியையின் தலையை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் துண்டித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.