ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலம் மற்றும்
மூலப் பொருட்கள் 30 நாட்களுக்குள் பாதுகாப்பாக அகற்றப்படும் என்று
தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில்
இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மே 28-ஆம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படும்
என்று அரசாணை வெளியிடப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்,
இந்த ஆலையில் உள்ள அமிலக் கொள்கலனில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாக
தகவல்கள் பரவின. இதையடுத்து சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர்
ஆய்வு செய்து அதை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:
அமிலக்
கசிவு போன்று வேறு ஏதாவது உள்ளதா எனவும், இதர சேமிப்புக்கலன்களின் இருப்பு
நிலை, தன்மைகள் குறித்தும் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சென்னை
ஐஐடி-யின் ஓய்வு பெற்ற பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற
பேராசிரியர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்
குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேலும் அமிலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி
தொடங்கி உள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் 30 நாள்களுக்குள் முழுமையாக
வெளியேற்றப்படும். இதில் ஜிப்சம் கூடுதல் இருப்பு உள்ளதால், அதை வெளியேற்ற
ஆலை தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
ஆலையின்
மின்சார இணைப்பு ஏற்கெனவே துண்டிக்கப்படுள்ளதால், ஜெனரேட்டர் உதவியுடன்
இவற்றை பம்பிங் செய்து லாரிகள் மூலம் வெளியேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இப்பணிகள் துவங்கியுள்ளன என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
No comments:
Post a Comment