இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெரு WSC விளையாட்டு குழுவினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், தொடர்ந்து பரிசுகள் வழங்கி வரும் நல் உள்ளங்களுக்கும் TIYAவின் சார்பாக வாழத்துக்களை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.
அதிராம்பட்டினத்தில் அதிகமான மக்கள்
விளையாட்டின் மீது நேசம் கொண்டு காலம் காலமாக விளையாட்டை விளையாடிக்கொண்டு
உள்ளார்கள்…. அதன் அடிப்படையில் பல தெருகளில் விளையாட்டு போட்டிகள்
சிறப்பாக நடந்தப்படுகிறது,
ஆனால் கிளப் சார்பாக மட்டும் மாநில அளவில்
புகழ் மிக்க விளையாட்டு வீரர்களை கொண்டு நடத்தப்படும் இந்த இரண்டு நாள்
கைபந்து விளையாட்டை ஆதரிக்கும் பலர் அதிரை பெரிய ஜீம்மா பள்ளியின்
பின்புறம் அமைந்துள்ள மேலத்தெரு Wsc விளையாட்டு மைதானத்தை படை எடுத்து
செல்லுவார்கள்….. அதுவும் இல்லமால் ரசிகர்களுக்கு இருக்கை அமைக்கப்பட்டும் –
ரசிகர்கள் பல ஊர், கிராமத்தில் இருந்து வருவதால் வாகனங்களை சாலையில்
நிறுந்தமால் இடையூறு இல்லமால் பாதுகாப்பாக நிறுத்த இடம் தயார் செய்து
கொடுப்பார்கள்,..
இப்படி இருக்க அந்த பகுதியே வண்ண மின்
விளக்கு முலம் அலங்காரம் செய்யயப்பட்டு விழா கோலம் போல கண்களுக்கு விருந்து
அளிக்கும்… விழா மேடையில் சிறப்பு பரிசுகள் மற்றும் அதிரையில் சிறப்பு
விருந்தினார்கள் அமர்ந்து இருப்பார்கள் இப்படி பல காலமாக அதிரையில்
விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன….
இன்னும் இன்று தஞ்சாவூர் மாவட்டம் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப்
சார்பாக நடத்தும் (பதினெட்டாம்) 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான
கைப்பந்து தொடர் போட்டி-2018 அதிராம்பட்டினம் மேலத்தெரு (WSC) மைதானத்தில்
இன்று 30.06.2018 இரவு 8 மணியளவில் சிறப்பாக தொடங்கியது.
இதில் முதலவாது ஆட்டமாக திருச்சி ஜமால்
முகம்மது கல்லுரி அணியுனரும், புறா கிராமம் அணியினரும் விளையாட தொடங்கினர்.
இவ்விளையாட்டினை எம்.எம்.எஸ் அப்துல் கரிம் மற்றும் முன்னால் கால்பந்து
வீரர் ஜபுருல்லாஹ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு
விருந்தினர்களாக எம்.எம்.எஸ் அப்துல் கரிம், என்.எம்.எஸ் சேக் பாரித்,
நிஜாம் மட்டன் ஸ்டால் ராஜிக் அகமது, முன்னால் கால்பந்து வீரர் ஜபுருல்லாஹ்,
ஹாஜா நசுருதீன், மீடியா மேஜிக் நிஜாம், அஜ்மல் பிரதர்ஸ் பயாஸ், அப்துல்
ஹலிம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிதனர்.
இதில் சிறப்பு நடுவராக பாரதி உடற்கல்வி ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்றார்…
மேலும் இப்போட்டிக்கு விளையாட்டு குழு
சார்பாக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி
சிறப்பாக அமைய அதிரை மீடியா சார்பில் பரிசுகள் அளித்த நல்உள்ளம் கொண்ட
சகோதர்கள் மற்றும் விளையாட்டு குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து
கொள்கின்றோம்.
போட்டிகான பரிசுகளிம் முழு விவரம்:-சிறப்பு விருந்தினர்கள்
ர ர
நன்றி : அதிரை மீடியா
No comments:
Post a Comment