மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை
அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்
காயமடைந்த சிறுமிக்கு இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டு
நீதி கிடைக்க வேண்டி ஆயிரகணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில்,
ஈடுபட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த போராட்டத்தில் கலந்து
கொண்டனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ சுதர்சன் இந்தூர் மருத்துவமனைக்கு
நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நலம் குறித்து
விசாரித்தார்.
இந்த பலாத்காரம் தொடர்பாக போலீஸார்
நடத்திய விசாரணையில், அந்த பகுதியைச் சேர்ந்த இர்பான்(வயது24) என்ற இளைஞரை
போலீசார் கைது செய்தனர். அவரின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:
மாண்டசூர்
நகரில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு,
இன்று உயிருக்குப் போராடி வருகிறார். இந்த சிறுமிக்குக்கு இழைக்கப்பட்டுள்ள
இந்த கொடுரம் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
நம்முடைய
குழந்தைகளைக் காக்க இந்தத் தேசமே ஒன்றுதிரள வேண்டும். பலாத்காரத்தில்
ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி விரைவாக நீதி
பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
In Mandsaur, MP, an 8-year-old girl was kidnapped and gang raped, and is battling for her life. The brutality this young child was subjected to sickens me. As a nation, we must come together to protect our children and bring the attackers to speedy justice.— Rahul Gandhi (@RahulGandhi) June 30, 2018
No comments:
Post a Comment