மேற்கு வங்காளத்தில் சுந்தரவன ஆற்றில் புலி ஒன்று நீந்தி எதிர்புறம் உள்ள கென்டோ தீவு பகுதிக்கு செல்ல முற்பட்டு உள்ளது. ஆற்றில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த மீனவர்கள் சிலர், தன் வழியே சென்ற புலியை மூங்கில் கம்புகள் மற்றும் பிற கம்புகளை கொண்டு தாக்கி உள்ளனர்.
இதுபற்றி சுந்தரவன புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நிலஞ்சன் மாலிக் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, வனவாழ் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளார்.
சுந்தரவன காடுகளில் மனித மற்றும் விலங்கு மோதல்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், புலிகளின் எண்ணிக்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் திருப்திகரமுடன் நடந்து வரும் வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன் அறியப்பட்டதில்லை என்று மேற்கு வங்காள வனவாழ் வாரியத்தின் உறுப்பினர் சாய்தீப் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment