திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2 வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது.
தினசரி
அவர் காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் நேரில்
ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இயக்குநர்
பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீஸார் சர்சைக்குரிய பேச்சு (ஐபிசி
153), பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது (505/1பி) ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை நகர காவல்துறை
ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரதிராஜா மனு செய்தார்.
இதை இன்று விசாரித்த ஹைகோர்ட் பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
திருவல்லிக்கேணி
காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு, தினசரி காலை 10.30 மணணியவில்
பாரதிராஜா ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஹைகோர்ட் நிபந்தனை
விதித்துள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment