சண்டிகர்: போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் பரிந்துரையை பஞ்சாப் அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அம்ரிந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர்
அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற
இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும்
போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்
சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பஞ்சாப் அரசின் சார்பில் மத்திய அரசிடம்
வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு என்ற அவர், மரண
தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக
அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
source: oneindia.com
No comments:
Post a Comment