தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில்
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நல்ல மழை அடித்து
வெளுக்காத என மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
தென்மேற்கு பருவமழையால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும்
அதே
நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை
பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில்
இன்று பிற்பகலுக்குப் பிறகு நல்ல மழை பெய்து வருகிறது.
சூறைக்காற்றுடன்
உளுந்தூர்பேட்டை
நகர் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பலத்த மழை
பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் சுற்றுவட்டாரம்
திண்டுக்கல்
, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து
வருகிறது. விருதுநகர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னால்கோவில் சுற்றுவட்டார
பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரத்தில் பலத்த மழை
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கமூதி, அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது
காஞ்சிபுரம்
மாவட்டம் உத்திரமேரூர், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத் உள்ளிட்ட
இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி,
கவரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று
சேலத்தில் விடிய விடிய கொட்டிய மழையை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான
மாவட்டங்களில் இன்று பரவலாக கொட்டித் தீர்க்கும் மழையால் பொதுமக்கள்
மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment