பிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி
சிக்கலான
பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம் காட்டியது, அவர்
அணிந்திருந்த பிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூ. சிசிடிவி கேமராவில் நபரின் முகம்
தெளிவாக பதியாவிட்டாலும், சமூக ஊடகங்களின் உதவியால் குற்றவாளி அடையாளம்
காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறான்.
சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்,
விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மற்றொருவரின் குடும்பத்தினர், தங்கள் மகன் நிரபராதி என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூன்
26ஆம் தேதி மதிய வேளையில் மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சைர் நகரில் ஏழு
வயது சிறுமி தனது பள்ளியில் இருந்து வெளியே சென்றார். பள்ளி முடிந்து
மூன்று மணி நேரம் வரை மகள் வராததால் தந்தை காவல்நிலையத்தில் புகார்
அளித்தார்.
போலிசார் பள்ளிக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த
சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அவை வேலை செய்யவில்லை, என்பதோடு, தவறான
திசையில் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கோரி மந்த்சைர் நகரில் நடைபெற்ற மக்கள் பேரணி
சிறுமியின்
குடும்பத்தினரிடம் போலிசார் தீவிரமாக விசாரித்தனர். நகரத்தில் இருந்து 40
கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சீதாமவ் கிராமத்தில் உள்ள உறவினர்
வீட்டிற்கு குழந்தை சென்றிருக்கலாம் என்று தந்தை சந்தேகம் தெரிவித்தார்.
அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமியின் குடும்பத்தினர்
சில நாட்களுக்கு முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு தங்களது நிலத்தை விற்றனர்.
அதற்கும் சிறுமி காணமல் போனதற்கும் தொடர்பு இருக்குமா, சிறுமி பணத்திற்காக
கடத்தப்பட்டிருக்கலாமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
மேற்கொண்டனர்.
போலீசின் 15 குழுக்கள் நாலாப்புறமும் தேடினாலும் எந்தவிதமான குறிப்பும் கிடைக்கவில்லை.
நகரின்
லக்ஷ்மண் கேட் பகுதியில் ஜூன் 27ஆம் தேதியன்று ரத்தக்களறியாக அந்த சிறுமி
போலீசின் சார்லி மொபைல் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
போலீசார்
சிறுமியை மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மறுபுறம் பாலியல்
வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி என்று வழக்கு பதியப்பட்டது.
அந்தப்
பகுதியில் வேர்கடலை விற்கும் சிறுவியாபாரியான தினேஷ், அந்த சிறுமி
ரத்தக்களறியாக சாலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனார்.
உடல்
முழுக்க காயங்களுடன் ரத்தம் தோய்ந்த உடையிலும் இருந்த அந்த சிறுமியால்
பேசவோ, சைகை காட்டவோ கூடமுடியவில்லை. கொடூரத்தின் உச்சகட்டம் அது என்று
அவர் கூறுகிறார்.
சிசிடிவி பதிவுகளை கொண்டு தேடுதல் வேட்டை
பள்ளிக்கூடத்தில்
உள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்த நிலையில் இருந்ததால், அந்த பகுதியில்
இருந்த பிற சிசிடிவி பதிவுகளை ஆராயலாம் என அதிகாரிகள் முடிவு செய்யதனர்.
பள்ளியின்
சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைக்காரர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் உதவி
கோரினார்கள். அவர்களிடம் இருந்த சிசிடிவி பதிவுகள் அனைத்தும் காவல்துறை
கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது.
சிசிடிவி பதிவு
சிசிடிவி
பதிவுகளை பல மணி நேரம் ஆரய்ந்து பார்த்தபோது, பள்ளிச் சீருடை அணிந்த ஒரு
சிறுமி, ஒரு இளைஞனின் பின்னால் செல்லும் மூன்றுப் பதிவுகள் கிடைத்தன.
இந்த
விசாரணையில் கிடைத்த முதல் வெற்றி இதுதான். ஆனால் அந்த இளைஞனின் முகம்
கேமராவில் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனது காலில் அணிந்திருந்த
பிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவின் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது.
ஷுவை வைத்து எப்படி குற்றவாளியை நெருங்குவது? வேறு வழியில்லை. எனவே சமூக ஊடகங்களின் உதவியை நாடலாம் என்று ஒரு முயற்சி செய்யப்பட்டது.
அந்த
இளைஞன் இருந்த மூன்று சிசிடிவி கேமரா பதிவுகளும், சமூக ஊடகங்கள் வாயிலாக
மந்த்சைர் நகரில் வைரலாக பரப்பப்பட்டு, அந்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள்
காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இப்படி
செய்ததில் சாதகம் மட்டுமல்ல, பாதகங்களும் ஏற்படும் சாத்தியங்களும்
இருந்தாலும், குற்றவாளியை விரைவாக கண்டுபிடிக்க வேறு எந்த வழியும்
போலீசாரிடம் இல்லை. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான பல்வேறு தவறான
வதந்திகளும் வாட்ஸ்-அப் மூலம் பரவியது.
பாதிக்கப்பட்ட சிறுமியின்
பெயரும், அவரது பழைய புகைப்படங்களும் வாட்ஸ்-அப்பில் பரவலாயின. சம்பவம்
தொடர்பாக உணர்ச்சியை தூண்டும் அறிக்கைகளும் பரவலாகின.
கொடூரமான பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள் என்ற செய்தி நகரில் தீயாக பரவியது.
சிசிடிவி பதிவு
அழுத்தம் அதிகம், நேரம் குறைவு
கொந்தளித்த
மக்கள் வீதிக்கு வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் வேண்டும்
என்று கோரி ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினார்கள். பேரணி வன்முறையாக
மாறிவிடக்கூடாது என்று நிர்வாகத்தினருக்கு கவலைகள் அதிகரித்தன. நான்கு
வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. முஸ்லிம் ஒருவரின் உணவுக் கடை ஒன்று
அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் முஸ்லிம்
பகுதி என்பதும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் முஸ்லிம்
என்பதாலும் பிரச்சனைக்கு மதச்சாயம் பூசப்படலாம் என்றும் அச்சங்களும்
எழுந்தன.
அரசியல் ரீதியிலான அழுத்தங்களும் அதிகரித்தன. நகரில் அமைதியை பேணி காக்கவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
நிலைமையை கருத்தில் கொண்டு மாநில அரசு உடனடியாக கூடுதல் பாதுகாப்பு படைகளை அங்கு அனுப்பி, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.
மந்த்சைர் சரக போலிஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங்கின் கருத்துப்படி, சாலையில் இறங்கி நீதி கோரிய மக்கள் ஆக்ரோஷத்துடன் இருந்தார்கள்.
அவர்
கூறுகிறார், "மதரீதியிலான மோதல்கள் வலுக்கலாம்; பதற்றங்கள் அதிகரிக்கலாம்
என்பதற்கான சாத்தியங்கள் இருந்தன. ஆனால் போலீசார் நடுநிலைமையுடனும், உரிய
முறையில் செயல்பட்டார்கள். மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
இவற்றால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டது."
மாவட்ட
அளவில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவரும் உள்ளூர் அமைப்பான சீரத்
கமிட்டியின் தலைவருமான அன்வர் அகமத் மன்சூரியிடம் பிபிசி பேசினார்.
"விவகாரம் விபரீதமாகி விடக்கூடாது என்று நாங்கள் அனைவரும் அச்சமடைந்தோம்.
ஆனால் உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதில் நாங்கள்
போலீசுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தோம்".
மந்த்சைர் நகரில்
மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றும் இமான் தன்ஜீம்
அமைப்பின் தலைவர் முகமது ஆரிஃப்பிடம் பிபிசி பேசியது. "சூழ்நிலை மிகவும்
மோசமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் எடுத்த முடிவினால் நிலைமை விபரீதமாகாமல்
தடுக்கப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
முகமது ஆரிஃப்
"கைது
நடைபெற்ற அடுத்த நாள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் இணைந்து பேசி,
பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்
முஸ்லிம். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் இஸ்லாமிய
விதிமுறைகளுக்கு எதிரானது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவருக்கு மந்த்சைர் இடுகாட்டில் அடக்கம்
செய்ய அனுமதிக்கமாட்டோம்".
பஜ்ரங் தள் அமைப்பின் மாவட்ட தலைவர்
ஜிதேந்த்ர ராதெளரின் கருத்துப்படி, "மந்த்சைரில் மாற்று மதத்தினர் மீது
யாரும் எந்தவிதமான அழுத்தங்களையும் ஏற்படுத்துவதில்லை. முஸ்லிம்
சமூகத்தினருக்கு அச்சம் இருந்திருக்கலாம். நடைபெற்ற சம்பவம் மிகவும்
கொடூரமானது என்று நாங்களும் பிற இந்து அமைப்புகளும் கருதுகிறோம். குற்றம்
சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தினர் கருத்து
வெளியிட்டதற்கு அச்சமோ அழுத்தமோ காரணம் என்று நாங்கள் கருதவில்லை.
சிறுமிக்கு செய்யப்பட்ட கொடுமை, கொடூரத்தின் உச்சகட்டம், முஸ்லிம்களின்
வீடுகளிலும் பெண் குழந்தைகள் இருப்பதுதான் அவர்கள் அப்படி அறிக்கை
வெளியிட்டதற்கு காரணம்" என்கிறார் அவர்.
ஜிதேந்த்ர ராதெளர்
கைது
செய்யப்பட்ட இருவரும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இந்தோர் மருத்துவமனையின் அரசு மருத்துமனையில்
சிகிச்சையளிக்கப்ப்டுகிறது.
முதலில் சிறுமி பிழைப்பது சிரமம் என்று
கூறப்பட்டாலும், தற்போது தீவிரமான சிகிச்சைக்கு பிறகு சிறுமியை பிழைக்க
வைத்துவிடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சிறுமிக்கு
நினைவு திரும்பியதும், கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகே
வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.
No comments:
Post a Comment