டில்லி:
''உணவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த
2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பணவீக்கம் அதிகரித்துள்ளது'' என்பது
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது. ரிசர்வ்
வங்கியின் நாணய கொள்கையில் வலுவடையும் வகையில் வளர்ச்சி இருக்க வேண்டும்
என்று இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி
வரை நடந்த சர்வேயில் 37 பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்தில்,
''சில்லரை விற்பனை விலை 5.30 சதவீதம் உயர்ந்துள்ளது. இது 2016ம் ஆண்டு ஜூலை
வரை வேகமாக இருந்தது. மே மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்தது. அதனால் பண
வீக்கம் ரிசர்வ் வங்கியில் 4 சதவீத இலக்கை நேர் 8 மாதங்களில் தாண்டியது''
என்றனர்.
வரும் 12ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகவுள்ள அறிவிப்பில் இது
4.60 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை இருக்கும் என்று கணித்துள்ளனர். இந்த
ஆண்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
ஜூன் மாதத்தில் இது 13 சதவீதமாக இருந்தது. இந்தியா அதிகவிலை கொடுத்து
இறக்குமதி செய்ததால் தான் பணவீக்கம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.
''2019ம்
ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு விவசாயிகள் வருவாயை அதிகரிக்கும் வகையில்
குறை ந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவு
செய்ய வேண்டி வரும். மொத்த விற்பனை விலைப் பட்டியல் 15 மாத உயர்வை உடைத்து
ஜூன் மாதத்தில் 4.93 சதவீதம் என்ற அளவிலும், மே மாதத்தில் 4.43 சதவீதம்
என்ற அளவிலும் இருந்தது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment