நன்றி.நன்றி..நன்றி...
வல்ல அல்லாஹ்வை
வணங்கி வாழ்வோம். இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.
புனித மிக்க
ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி தாராளமாக
அமீரக TIYA விற்க்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள்
ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற *அமீரக TIYA வின்
* வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா
தாங்கள்
குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில்
வழங்கப்பட்டு விட்டது.
வழங்கிய
பொருட்களின் விபரம்
10கிலோஅரிசி,
கடற்பாசி, சேமியா, ஏலம்,
திராட்சை, முந்திரி, இஞ்சி,
பூண்டு, ஆயில், ஒரு
உயிர் கோழி, மசாலா பொருட்கள், 100 ரூபாய் பணம் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 135 குடும்பங்கள் பயனடைந்தனர்.
அருளாளன்
அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களை ஏற்று எல்லா நற்பாக்கியங்களையும் வழங்க
பிரார்த்திக்கின்றோம்.
*அமீரக TIYA
* மற்றும் குவைத் வாழ் நமது முஹல்லா சகோதரர் பாவா
பகுருதின் (பிச்சை குட்டி) மூலம் பெறப்பட்ட தொகைகளை நமது முஹல்லாவில் ஆராவாரமின்றி
விநியோகித்த தாயக TIYA நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் அன்பர்களுக்கும், அமீரக
TIYA நிர்வாகிகளுக்கும், ஃபித்ரா
தொகையினை வழங்கிய அமீரக வாழ் நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் என்றும் சூழ
பிரார்த்திக்கின்றோம் மற்றும் தாங்களும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
என்றும்
அன்புடன்
தலைவர் மற்றும்
நிர்வாகிகள்
தாஜுல் இஸ்லாம்
இளைஞர்கள் சங்கம் (TIYA)
No comments:
Post a Comment