நாடு முழுவதும் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளரை நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
கடந்த
மே 17ம் தேதி டில்லியில் பாஜக அனைத்து அணிகளின் தேசிய செயற்குழு கூட்டம்
நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர்
அமித்ஷாவுடன் பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதன்படி நாட்டில்
உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம் செய்ய
வேண்டும். 543 தொகுதிகளிலும் இந்த நியமனம் நடைபெறும். பொறுப்பாளர் அந்த
தொகுதியை சாராதவராக இருக்க வேண்டும். இது தவிர மாநிலம் தோறும் 11 பேர்
கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இவர்களுக்கு 13 பணிகள் ஒதுக்கீடு
செய்யப்படும்.
அதை அந்த குழு மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஏதுவான
தேர்தல் களத்தை உருவாக்குவது இவர்கள் பணியாகும்.
அனைத்து
தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை பாஜக முதன் முறையாக வரும் 2019ம்
ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு நியமனம் செய்கிறது. இந்த நடைமுறையை
பகுஜன் சமாஜ் கட்சி நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து
பாஜக.வினர் கூறுகையில்,''2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதை விட
2019ம் ஆண்டு தேர்தலில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். எங்களை முதலில்
புரிந்து கொண்டால் தான் எங்களது பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் காண
முடியும். மோடியும், அமித்ஷாவும் இணைந்து ஒருங்கிணைந்த பணியில் கவனம்
செலுத்துகின்றனர்'' என்றார்.
நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை
அமித்ஷா தொடங்கியுள்ளார். இந்த பயணம் கடந்த 10ம் தேதி சத்தீஸ்கரில் இருந்து
தொடங்கியுள்ளது. ஜூலை இறுதிக்குள் அனைத்து மாநிலத்திலும் பயணம் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடு பணிகளை பயணத்தின் போது ஆய்வு
செய்கிறார். கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வலுவான
எதிர்கட்சிகள் கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை பாஜக.வுக்கு
ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment