வரி நிலுவை காரணமாக விஜய் மல்லையாவின் சொகுசு
விமானத்தை நேரடி சேவை வரி துறை கையகப்படுத்தி இருந்தது. இதை ஏலம் விட 2
முறை முயற்சித்தும் உரிய விலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் 3வது
முறையாக இன்று ஏலம் விடப்பட்டது. இந்த முறை மல்லையாவின் விமானம் ரூ. 35
கோடிக்கு ஏலம் போனது. அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று அந்த குட்டி விமானத்தை
ஏலத்தில் எடுத்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பிறகு மல்லையாவின் விமானம்
ஏலம் போய் இருக்கிறது. 650 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம் 5
ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் தற்போது பறக்கும் நிலையில்
இல்லை. இதனால்தான் அந்த விமானம் குறைவாக ரூ.35 கோடிக்கு மட்டுமே ஏலம்
போனது.
இந்த விமானத்தில் படுக்கை அறை, குளியல் அறை, பார் வசதி, கான்பரன்ஸ்
ஹால் ஆகிய வசதிகள் உள்ளது. இந்த விமானம் மல்லையாவுக்கு மிகவும் பிடித்த
விமானமாகும். இதில் அடிக்கடி அவர் வெளிநாடுகளுக்கு பறந்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment