நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து 63 வயதான விமானி பாதுகாப்பாக
அனைத்து பயணிகளையும் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கினார். கடந்த
சனிக்கிழமை மணிப்பூரில் உள்ள இம்பால் விமான நிலையத்தில் இருந்து மேற்கு
வங்கத்திற்கு இண்டிகோ விமானம் 170 பேரை ஏற்றி சென்றது. இந்த விமானத்தை
கியூபாவை சேர்ந்த 63 வயதான கேப்டன் சில்வியோ டையாஸ் அகோஸ்டா இயக்கி
சென்றார்.
விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த போது விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. விமானத்தை இயக்குவதில் அனுபவமிக்க அகோஸ்டா மேற்கு வங்கம் செல்வதற்கு முன்பாக பாதுகாப்பாக பயணிகளை தரையிறக்க முடிவு செய்தார். உடனே கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தை தொடர்பு கொண்ட அகோஸ்டா விமானத்தை தரையிறக்க உள்ளதாக தெரிவித்தார்.

தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் விமானத்தை தனது கட்டுக்குள்
வைத்துக் கொண்டு பாதுகாப்பான பகுதியை பார்த்து சரியாக மாலை 4.45 மணியளவில்
தரையிறக்கினார். அகோஸ்டாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சில நிமிடங்கள்
விமானம் அவரது கட்டுக்குள் இருந்து சென்றது. உடனே அகோஸ்டா தொடர்ந்து
முயற்சி செய்து விமானத்தை தரையிறக்கினார்.
இந்நிலையில் விமான நிலையில் மருத்துவ வசதிகள் தயாராக இருந்தன. விமானம் தரையிறங்கியதும் விமானிக்கு உடனடியாக முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் " இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிகவும் கடினமான சூழலை தாண்டி வந்துள்ளார். மரணத்தை சந்தித்துள்ளார், அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது மெல்ல தேறி வருகிறார் " என்று தெரிவித்தனர்.
இது குறித்து விமானத்துறை அதிகாரிகள் கூறுகையில் "
அகோஸ்டாவின் செயலால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம், அவருக்கு தொடர்ந்து
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இயக்கிய விமானத்தில் 176 பேர்
இருந்தனர், அவர்கள் அனைவரையும் அகோஸ்டா காப்பாற்றியுள்ளார்" என்று கூறினர்.
No comments:
Post a Comment