
மலேசியாவில் இருந்து சரக்கு விமானம் லண்டன் ஹித்ரு விமான
நிலையத்திற்கு வந்திறங்கியது. சுங்கத்துறையினர் வழக்கமான சோதனை நடத்தினர்.
அப்போது 5 பெட்டிகளில் ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்தனர்.
பெட்டியை
உடைத்து பார்த்த போது ஒவ்வொரு பெட்டியிலும் தலா 10 முதலை குஞ்சுகள் என 50
முதலை குஞ்சுகள் உயிருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறிய
பெட்டி என்பதால் முதலைகள் ஒன்றையொன்று சண்டையிட்டதில் ஏற்பட்ட சத்தம்
காட்டிகொடுத்துவிட்டது. இந்த முதலை குஞ்சுகள் எதற்காக கடத்தி வரப்பட்டது
என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment