சென்னை: நீட் தேர்வு மையம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில்
சொல்ல முடியாமல் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு கட்டத்தில் கோபமாக பேசினார்.
மருத்துவ
சேர்க்கை நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு. இந்த தேர்வு பல்வேறு
எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் நாளை 2-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.
இந்த
தேர்வே வேண்டாம் என்று மாணவர்கள் கோரி வந்த நிலை மாதிரி, தமிழகத்திலாவது
தேர்வு மையங்களை அமையுங்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பெரும்பாலான
மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள்
ஒதுக்கப்பட்டன.
புறக்கணிக்கும் நோக்கம்
1.10 லட்சம் மாணவர்கள் .
1.10 லட்சம் மாணவர்கள் .
இது
முழுக்க முழுக்க தமிழக மாணவர்களை மருத்துவ படிப்பிலிருந்து புறக்கணிக்கும்
நோக்கம் என்று அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
டிஎன்பிஎஸ்இ தேர்வு, காவலர் தேர்வுகளில் 6 அல்லது 7 லட்சம் மாணவர்கள்
எழுதுகின்றனர். அதற்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் அமைக்கப்படும்போது
நீட் தேர்வுக்கு ஏன் அமைக்கக் கூடாது என்று சென்னையில் செய்தியாளர்களை
சந்தித்த தமிழிசை சௌந்திரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர்
1.10 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுகள் மாதிரி இல்லை
வெளிமாநிலங்களில்
நீங்கள்
சொல்வது போல் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகள் மாதிரி இது கிடையாது என்ற
தமிழிசையிடம் செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் தேர்வு நடத்த அத்தனை
கட்டமைப்பு வசதிகள் இருந்தும் வெளிமாநிலங்களில் நடத்துவது ஏன் என்று கேள்வி
எழுப்பினார்.
கொந்தளித்த தமிழிசை
அடுத்த கேள்வி கேட்டால் எப்படி
இதனால்
கொதித்த தமிழிசை , நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்குள் என்னை
கேள்வி கேட்டால் எப்படி. சிபிஎஸ்இயிடம் கேள்வி கேட்டாலும் அவர்கள் பதில்
சொல்ல அவகாசம் தர வேண்டும் அல்லவா. இப்படி பதில் சொல்வதற்குள் நீங்கள்
அடுத்த கேள்வி கேட்டால் எப்படி என்றார்.
கேமரா முன்னால் இப்படியா
திணறிய தமிழிசை
அப்படியும்
விடாமல் மற்றொரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தம்பி நான் பதில்
சொல்லனுமா வேண்டாமா என்றார். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும், ஆனால்
நீங்கள் சொல்வது மழுப்பலாக உள்ளது என்றார். இதற்கு தமிழிசை என்ன மழுப்பலாக
உள்ளது. கேமரா முன்னால் இப்படிதான் நடந்து கொள்வீர்களா என்று கேட்டு ஒரு
வழியாக நீட் தேர்வு நடத்தும் சிபிஎஸ்இ அமைப்பை கண்டிப்பதாக தமிழிசை
கூறினார்.
source: oneindia.com
No comments:
Post a Comment