தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள்
நேற்று 100-ஆவது நாளாக போரடிவந்தனர். அப்போது காவல் துறையினர் தடியடி
நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த
முயன்றனர்.
காவல் துறை முண்டியடித்துக் கொண்டு
ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது காவல் துறை அவர்கள்
மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகிவிட்டனர். 100
மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுயிருக்கிறது.
144
தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் உறவினர்கள் ஓரிருவரை தவிர மற்றவர்கள்
கலைந்து செல்லுமாறு காவல் துறை கூறியும் கேட்காததால் மக்கள் மீது தடியடி
நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மேலும் அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ஆட்சியர் வருவதாலும் தடியடி
நடத்தப்பட்டியுள்ளது.
இந்நிலையில், மீண்டும்
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடிய பொது
மக்கள்,ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு
செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்த வந்தனர். இதனை
அடுத்து போலீசார் மீண்டும் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க
முயன்றனர்.
ஆனாலும் அவர்கள் களைந்து செல்ல
மறுக்கவே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கலைத்தனர். ஆனாலும்
சிறிது சென்ற போராட்டகாரர்கள் மீண்டும் ஒன்று கூடினர், இதனையடுத்து
போலீசார் வானத்தை பார்த்து துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த பகுதி
முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனையடுத்து
தூத்துக்குடி அரசு மருத்துவமே அருகே நிறுத்து வைக்க பட்டிருந்த போலீசாரின்
பேருந்துகளை தீவைத்து போராட்டக்காரர்கள் கொளுத்திவிட்டனர். இதனால்
மீண்டும் போலீசார் அவர்களை பார்த்து துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட போது
அவர்கள் தப்பி சென்றனர். மேலும் அங்கிருந்த பேருந்துகளின் கண்ணாடிகளையும்
உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில்
போராட்டத்தின் வீரியத்தை குறைக்க தமிழக அரசு இணையதள சேவையை நிறுத்தி வைக்க
முடிவு செய்துள்ளது, மேலும் செய்தி ஊடகங்களால் போராட்டம் தீவிரமடைவதாலும்
செய்தி சேனல்களையும் முடக்கி வைக்க உத்தரவு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த
முடக்கம் மூன்று நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிகிறது. இந்த தடை
தூத்துக்குடி கன்னியாகுமாரி திருநெல்வெளி மாவட்டங்களில் நடைமுறைக்கு
வருவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் அமலுக்கு
வந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment