சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் ஸ்டெர்லைட்
ஆலையின் பணம் விளையாடி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா என்ற போதைப்பொருளை விற்க அமைச்சர்களும், அதிகாரிகளும்
லஞ்சம் வாங்கியதை போன்று, போராட்டத்தை ஒடுக்க ஸ்டெர்லைட் ஆலை
நிர்வாகத்திடம் இருந்து பணம் பெறப்பட்டு இருக்கலாம் என்று பல்வேறு கட்சித்
தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தூத்துக்குடியில் 12 பேர்
கொல்லப்பட்டது திட்டமிட்ட செயல் என்பதும் தலைவர்களின் சந்தேகமாகும்.
திருமாவளவன் பேட்டி :
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், போராட்டக்காரர்களை திட்டமிட்டு சதி செய்து தமிழக அரசு கொன்று குவித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசும் - காவல்துறையும் இணைந்து மக்களை படுகொலை செய்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூட்டில் பயிற்சி பெற்ற காவலர்களை வைத்து மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
திருநாவுக்கரசர் பேட்டி :
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு முயற்சிப்பதாக சாடினார். மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி பேட்டி :
தமிழக மக்கள் இனி போராடுவதை பற்றி சிந்திக்க கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு தூத்துக்குடியில் பொதுமக்கள், காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் இதுவரை கலவரத்தை அடக்க இதுபோன்ற ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியது இல்லை என குறிப்பிட்டார். துப்பாக்கியால் சுட்ட காவலர்கள் ஒருவர் கூட சீருடையில் இல்லை என்பதும் மிகப்பெரிய தவறு என்றார் அவர் தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த தீவைப்புகளும் போலீஸ்காரர்களின் செயல் தான் என்பது புகாராகும். எனவே குட்கா பேரம் போன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் பின்னணியிலும் பணம் கைமாறியுள்ளதாக புகார் எழுந்து இருக்கிறது.

No comments:
Post a Comment