
அம்மா இலவச வைஃபை சேவை மதுரை உட்பட ஐந்து நகரங்களில் முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தின்
முக்கிய நகரங்களின் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் என
மக்கள் அதிகமாக வரும் இடங்களில், வைஃபை என்ற அதிவேக இணையதள சேவை
வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி,
முதற்கட்டமாக, 50 இடங்களில், இலவச, வைஃபை சேவையை, அரசு கேபிள் டிவி
நிறுவனம் செயல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக சென்னை, மதுரை, திருச்சி,
சேலம், கோவை ஆகிய நகரங்களில் அம்மா இலவச வைஃபை சேவையை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் (மாட்டுத்தாவணி) நடந்த
தொடக்க விழா நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ,
ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் 20 நிமிடங்கள் இந்தச்
சேவையை, இலவசமாகப் பயன்படுத்தலாம். அதன்பின் தொடர வேண்டும் என்றால், ஒரு
மணி நேரத்துக்கு 10 ரூபாய் வீதம், இரண்டு மணி நேரம் வரை இந்தச் சேவையைத்
தொடர முடியும். அதற்கான பணத்தை மொபைலில் உள்ள பயன்பாட்டு குறியீட்டை
அழுத்தி அதில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தி,
செல்போனுக்கு அனுப்பப்படுகிற ஓ.டி.பி. மூலம் சேவையைப் பயன்படுத்தலாம்.
அனைவரும் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இச்சேவை இருக்கும் என்று
அதிகாரிகள் கூறினார்கள்.
No comments:
Post a Comment