
புரோக்கர்
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுடன் உரையாடும் ஆடியோவில் ஆளுநரின்
பெயரைக் குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்யிதற்கு தமிழக
ஆளுநர் பன்வாரிலால் கோபமாக பதிலளித்தார்.
சென்னை : புரோக்கர் பேராசிரியை
நிர்மலா தேவி மாணவிகளுடன் உரையாடும் ஆடியோவில் ஆளுநரின் பெயரைக்
குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்யிதற்கு தமிழக ஆளுநர்
பன்வாரிலால் கோபமாக பதிலளித்தார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி
கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர் அதிகாரிகளுடன் படுக்கையை
பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்த விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்றது கண்டனத்திற்குரியது.
நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை கேட்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
விசாரணைக் குழு அமைத்துவிட்டது.

கடுமையான நடவடிக்கை
நான்
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சந்தானம் தலைமையில் ஒரு நபர் குழுவை
அமைத்துள்ளேன். இவர் ஒரு வாரத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரித்து
அறிக்கையை தாக்கல் செய்வார். அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

போலீஸ் விசாரணையும் தொடரும்
நிர்மலா
தேவி மீது புகார் இருந்தும் ஏன் ஒரு மாதமாக நிர்வாகம் நடவடிக்கை
எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இது பற்றியும் சந்தானம் குழு
விசாரணை நடத்தும். சந்தானம் விசாரணை கமிஷனால் போலீஸ் விசாரணையில் பாதிப்பு
இல்லை. காவல்துறை விசாரணை தனியாக நடக்கட்டும். எனவே பேராசிரியை
விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மக்களுக்கு
நான் உறுதியளிக்கிறேன்.

நிர்மலா ஏன் ஆளுநர் பெயரை குறிப்பிட்டார்?
நிர்மலா
தேவி தன்னுடைய ஆடியோவில் ஆளுநர் பெயரை குறிப்பிட்டிருக்கிறாரே என்று
செய்தியாளர் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு என்ன சொல்லி இருக்கிறார்
அவர், நீங்கள் அந்த ஆடியோவை கேட்டீர்களா என்று ஆளுநர் கேட்டார். நான்
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன், பல்வேறு செனட் உறுப்பினர்கள்
மேடைக்கு வருவார்கள், பலர் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பார்கள்
என்றார். நான் இதுவரை நிர்மலா தேவியின் முகத்தை பார்த்தது கூட இல்லை.

பார்த்ததே இல்லை
என்னைச்
சுற்றி பாதுகாப்பு வளையம் இருக்கிறது ஒரு பறவை கூட என்னுடைய அனுமதி
இல்லாமல் என்னை அணுக முடியாது. முழு ஆடியோவையும் முழுவதும் கேளுங்கள், நான்
நிர்மலாவின் முகத்தை பார்த்தது கூட இல்லை.

தேவைப்பட்டால் உத்தரவிடுவேன்
சந்தானம்
குழுவின் அறிக்கையை பெற்ற பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை
பார்க்கலாம். சிபிஐ விசாரணைக்கு இதுவரை அவசியம் ஏற்படவில்லை, தேவைப்பட்டால்
முதலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது நானாகத் தான் இருப்பேன்.

நான் கொள்ளுப்பேரனை கூட பார்த்துவிட்டேன்
நான்
70 வயது பூர்த்தியடைகிறேன், எனக்கு பேரன், கொள்ளுப்பேரன்களெல்லாம்
இருக்கிறார்கள். இது போன்ற வார்த்தைகளை இனி ஒரு முறை உங்கள் வாயால்
சொல்லாதீர்கள் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment