அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
உலகெங்கும் வாழும் அன்புநிறை அதிரை மேலத்தெரு முஹல்லா சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்...
பொருள்: நமது முஹல்லாவில் கட்டப்பட்டு
வரும் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலச்சேவைகளுக்கான கட்டிடம் தொடர்பான விளக்கமும் வேண்டுதலும்
நமதூர் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கம்
அருகாமையில் ஒரு கட்டிடம் நம் முஹல்லாவின் பல்வேறு எதிர்கால நலன்களை முன்னிட்டு கட்டப்பட்டு
வந்த நிலையில் முழுமையடையாமல் தங்கள் அனைவருடைய ஆதரவையும் கட்டுமான வகையில் மட்டும்
மேலும் சுமார் 7 லட்சம் ரூபாய்க்கான செலவினங்களை எதிர்பார்த்தவாறு முடங்கியுள்ளதையும் அறிந்திருப்பீர்கள்.
ஏன் இந்தக் கட்டிடம்?
நமது ஊரின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கிவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் கேள்விக்குறியாகி
வரும் நிலையில் நமது இளைஞர்கள் உள்நாட்டிலேயே அரசு வேலைவாய்ப்புக்களை பெற்றிட சகலவகையான
தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளவும், சுய தொழில்கள் மற்றும் இதரவகை வேலைவாய்ப்புக்களுக்கான வழிகாட்டுதல்களை பெற்றிடவும்
தேவையான பயிற்சிகளை அவர்களுக்கு தருவது காலத்தின் கட்டாயம் என்பதை அனைவரும் ஒப்புக்
கொள்வீர்கள்.
திறமைகள் பல மறைந்து கிடக்கும் நமது முஹல்லாவிலுள்ள மாணவர்கள், இளம் தலைமுறையினர்கள், வாய்ப்பு வசதிகள் இல்லா இளைஞர்கள்
கண்டறியப்பட்டு அவர்கள் மென்மேலும் பட்டைத்தீட்டி மெருகேற்றும் நோக்குடன் அவர்களை ஆரோக்கியமானவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும், விளையாட்டு வீரர்களாக உருவாக்கவும், ஏழைகளுக்கு அரசாங்கங்கள் வழங்கி
வரும் பல்வேறு சலுகைகளை இங்கிருந்தே பெற்றுத்தந்திடுவது போன்ற ஏராளமான பல நல்ல நோக்கங்களை
நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளன.
நமது தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க (TIYA) நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன்,
1. நமது முஹல்லாவைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், படித்து முடித்து வேலைதேடும்
பட்டதாரிகள் ஆகியோர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி மையமாக செயல்படும்.
2. மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின்
நலனுக்காக மத்திய மாநில அரசுப்பணி தேர்வுகளான IAS / IPS / IFS / TNPSC போன்றவற்றிற்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு பயிலரங்கங்கள், பவர் பாயிண்ட் விளக்க வகுப்புக்கள்
நடத்தப்படும்.
3. போலீஸ்துறை (POLICE SI), தீயணைப்புத்துறை (FIRE SERVICE), வனத்துறை (FOREST DEPT), ராணுவம் (MILITARY) போன்ற தேசநலனுக்கான துறைகளில்
உள்ள வேலைவாய்ப்பை பெற்றிட ஏதுவாக எழுத்துத் தேர்வுக்கான பயிற்சிகளையும், உடல் தகுதித் தேர்வுக்கான களத்தையும்
வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தருதல்.
4. மாணவர்களின் கல்வியறிவை ஊக்குவிப்பதற்காக
அங்கேயே நூல் நிலையம் ஒன்று அமைத்தல்.
5.அதேபோல் தேசப்பணிகளுக்கு உடல்
வலிமையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதற்காக உள்ளரங்கு உடற்பயிற்சி மையம் அமைத்தல்.
6. மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு தனித்தனியாக
சிறப்பு வசதிகளுடன் கல்விசார் பயிற்சிகளை வழங்குதல்.
7.முதியோர் உதவித்தொகை, விதவைகள் மறுவாழ்வு மற்றும் விதவைகள்
உதவித்தொகை திட்டம், கல்வி சார்ந்த அரசு உதவித்தொகை திட்டங்கள், ஸ்காலர்ஷிப் போன்றவற்றை இங்கிருந்தே
ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றிட உதவுதல்.
8. பொது சுகாதாரம் மற்றும் பருவகால
நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துதல்.
9. பொதுமக்களுக்கான தேவையான கருத்தரங்குகளை
நடத்துதல் மற்றும் அரிதான நிகழ்வுகளின் போது சமூக அரங்கமாக பயன்படுத்துதல்.
10. இளைஞர்களின் சமூக நலன்சார் செயல்பாடுகளை
ஒருங்கிணைக்கும் களமாகவும் செயல்படும்.
என்பன போன்ற காலத்திற்கேற்ற இன்னும் பல பல்நோக்கு செயல்பாடுகளை ஒருங்கிணைந்து
செயலாற்றும் மையமாக என்றும் துடிப்போடு இக்கட்டிடத்தை பயன்படுத்திட திட்டங்கள் உள்ளன
என்றாலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீங்கள் செய்யும் உதவிகள் இன்றி நடைபெற்றிடாது. எனவே, அல்லாஹ்விற்காக, நமது முஹல்லாவாசிகளின் நன்மைக்காக
அமையவுள்ள இந்த கட்டிடத்தை முழுமையடையச் செய்து தருவதற்காக பொருளால், உடலால், உள்ளத்தால், பிரார்த்தனையால் உதவுவீர்கள்
என்று பெரிதும் நம்புகின்றோம்.
உங்கள் வீட்டு பணிகளில் ஒன்றாகக் கருதி இந்த கட்டிடப்பணிக்கு வாரி வழங்குங்கள் பிற நல்ல உள்ளங்களையும் வாரி வழங்கத்
தூண்டுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்வது.
நிர்வாகிகள் அமீரகம் மற்றும் அதிரை TIYA உறுப்பினர்கள்
No comments:
Post a Comment