அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அமீரக TIYAவின் புதிய நிர்வாகிகளின் முதல் அமர்வு 13.04.2018
வெள்ளிக்கிழமை
மாலை 7 மணிக்கு சகோதரர் S.M. சிராஜ் அவர்கள் இல்லத்தில் அமீரக தலைவர் N.M.S. சேக்பரீது அவர்கள்
தலைமையில் நடைபெற்ற அமர்வில் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது முஹல்லாவின்
நலன் குறித்து பல நல்ல விசயங்கள் விவாதிக்கப்பட்டு கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
தீர்மானம் வருமாறு
1. 2018ஆம் ஆண்டுக்கான
நமது முஹல்லாவை சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மாணவ, மாணவிகளை தாயகத்தில்
உள்ள TIYA நிர்வாகிகளின் உதவியுடன் கண்டறிந்து எல்லா வருடங்களை போல் இந்த கல்வி ஆண்டுக்கான
கல்வி உதவித் தொகையை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
2. நமது முஹல்லாவில் ஏழ்மை நிலையிலுள்ள சிறார்களை தாயக TIYAவின் உதவியுடன்
கண்டறிந்து TIYAவின் சார்பாக இந்த கல்வி ஆண்டு விடுமுறையில் ஹத்தனா செய்வதென
தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட
நிகழ்வுடன் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
அமீரக TIYA நிர்வாகம்
துபை
No comments:
Post a Comment