

நால்வர்கள்
மாபெரும்
சரித்திரத்தின் தொடர்ச்சி நீங்கள் என்று கூறிய சிவா, சாக்ரடீஸ், பிளாட்டோ,
அரிஸ்டாட்டில், அலெக்சாண்டர் கிரேகத்தில் நால்வர் சரித்திரத்தை மாற்றினர்.
காந்திஜி, நேதாஜி, நேருஜி இந்தியாவின் சரித்திரத்தை மாற்றியவர்கள். அதே
போல பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய நால்வர் தமிழ்நாட்டின்
சரித்திரத்தை மாற்றியவர்கள் என்றார்.

ஸ்டாலின் முதல்வராவார்
கோடை
காலம் சுட்டெரிக்கும் போது பதவியேற்றுள்ளார் ஸ்டாலின். இது போராட்டம்
மிகுந்த காலம் என்றும் பொதுநலம் கருதுபவர்கள் சுயநலனை பார்க்க மாட்டார்கள்
என்றார். பெரியார் சிலையில் உள்ள தலையில் கை வைக்க துணிந்து விட்டனர்.
உங்களின் தேவை என்ன ஆண்டாள் பாடிய தமிழா, அண்ணா முழங்கிய தமிழா?
பெரியாழ்வார் மண்ணா, பெரியார் பிறந்த மண்ணா. திமுக ஆட்சி மலர்ந்து ஸ்டாலின்
முதல்வராகும் போது நீட் தேர்வு தமிழகத்தில் இருக்காது என்றார்.

தமிழகத்தை ஆள முடியவில்லை
உலக
அளவில் மாவீரன் என்று வர்ணிக்கப்பட்டவர் அலெக்சாண்டர். செங்கிஸ்கான்
கொடுங்கோலன் என்கிறார்கள். காரணம் செங்கிஸ்கான் ஆசிய கண்டத்தை சேர்ந்தவன்
என்பதால்தான். அலெக்சாண்டர் உலகத்தை எல்லாம் வென்றவர் தமிழகத்தில் கால்
வைக்க முடியவில்லை. இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஆள நினைத்த மவுரியர்களால்
தமிழகத்தை ஆள முடியவில்லை. முகலாயர்களால் ஆளுமை செய்ய முடியாத மண்
தமிழ்நாடு.

இது பெரியார் மண்
தமிழனைப்
போல வாழ்ந்தவனும் இல்லை வீழ்ந்தவனும் இல்லை. இது பெரியார் பிறந்த மண்.
இனியும் இங்கே யாரும் கால் வைக்க முடியாது. இங்கே பறப்பது கறுப்பு சிவப்பு
கொடி. அதை காப்பது நீங்கள். வாளேந்தி நிற்பவனிடம் வானர சேனை வந்து
வம்புக்கு நிற்கிறது. வீரன் யார் என்றால் அர்ஜுனன் என்கிறார்கள். ஆனால்
இமயம் சென்று கொடியேற்றிய சேரன் செங்குட்டுவன் தான் வீரத்தின் அடையாளம்.
உலோக கவசத்தோடு பிறந்த கர்ணன், அவன் கொடை வள்ளலா? பாரிதான் கொடை வள்ளல்.
பாஞ்சாலி அல்ல வழிகாட்டும் பெண் கண்ணகிதான் என்றார் அண்ணா.

ஸ்டாலின்தான் நம்பிக்கை
பழித்தவனுக்கு
பாடம் புகட்டவே படையெடுத்து சென்றவன் தமிழன். தமிழகத்தில் பகைவர் கூட்டம்
பதுங்கி பாய்கிறார்கள். சோடா குடிப்பது தவறு என்றவர்கள் சோடா பாட்டில்
வீசுவேன் என்கிறார்கள். ஊடகங்களினால் ஊதுகாமலையான தலைவர்கள் ஆள முயற்சி
செய்கிறார்கள். டெல்லியில் பரபரப்பாக உச்சரிக்கின்ற பெயர் ஸ்டாலின்.
அடுத்து அவர்தான் பலரும் நம்பிக்கையோடு கூறுகிறார்கள் என்றும் திருச்சி
சிவா பேசினார்.

No comments:
Post a Comment