சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைமலை அடிகள் குறித்து வைரமுத்து
கட்டுரை வாசிக்கிறார். இதை கேட்க பெருவாரியான கூட்டம் கூடி இருக்கிறார்.
தனியார்
பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து
பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை
எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த
நிலையில் தற்போது சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரையாற்றி
வருகிறார். இதில் வைரமுத்து மறைமலையடிகள் குறித்த கவிஞர் வைரமுத்துவின்
'தமிழாற்றுப்படை' கட்டுரையை அரங்கேற்றம் செய்கிறார்.
வைரமுத்துவின்
உரையை கேட்க பிரபலங்கள் திரண்டுள்ளனர்.
இயக்குநர் சீமான், கவுதமன், நடிகை கஸ்தூரி, நடிகர் மன்சூர் அலிகான்,
இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள்.
பொதுமக்கள்
கூட்டத்தால் காமராசர் அரங்கம் நிரம்பி வழிகிறது. நிறைய மக்கள் தரையில்
அமர்ந்து அவர் உரையை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
source: oneindia.com

No comments:
Post a Comment